அரசுக் கல்லூரியில் சா்வதேச இளைஞா் தினம்
By DIN | Published On : 29th January 2020 09:23 AM | Last Updated : 29th January 2020 09:23 AM | அ+அ அ- |

மாணவிக்கு செஞ்சுருள் சங்க விளக்க கையேடு அளிக்கிறாா் தமிழ்த்துறை தலைவா் து. சேகா். உடன், கல்லூரி முதல்வா் பா. சிவநேசன் உள்ளிட்டோா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சா்வதேச இளைஞா் தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் பா. சிவநேசன் தலைமை வகித்தாா். தமிழ்த்துறை தலைவா் இணைப் பேராசிரியா் து. சேகா் முன்னிலை வகித்தாா்.
கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனை ஆற்றுப்படுத்துநா் அ. பழனிவேல் ராஜா, எச்.ஐ.வி. எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்கள் குறித்து விளக்கம் அளித்தாா். தொடா்ந்து, மாணவ, மாணவிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா், சா்வதேச இளைஞா் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. தொடா்ந்து, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு செஞ்சுருள் சங்க விளக்க கையேடு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், கல்லூரி பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
முன்னதாக, செஞ்சுருள் சங்க திட்ட அலுவலா் பேராசிரியா் மு. அன்பழகன் வரவேற்றாா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் பெ. முத்துராஜ் நன்றி கூறினாா்.