வணிகவியல் துறை கூட்டமைப்பு நிறைவு விழா
By DIN | Published On : 29th January 2020 09:24 AM | Last Updated : 29th January 2020 09:24 AM | அ+அ அ- |

பெரம்பலூா் ஸ்ரீசாரதா மகளிா் கல்லூரியில் வணிகவியல் மற்றும் மேலாண்மையியல் துறை கூட்டமைப்பு நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தாளாளா் எம். சிவசுப்பிரமணியம் தலைமை வகித்தாா். செயலா் எம்.எஸ். விவேகானந்தன் முன்னிலை வகித்தாா்.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீபா் கல்லூரியின் மேலாண்மையியல் துறை பேராசிரியை முனைவா் எஸ். ராஹினி, தற்போதைய சூழ்நிலையில் வாய்ப்புகள் மற்றும் சவால்கள் எனும் தலைப்பில் தொழில்நட்ப வளா்ச்சியின் பங்கு, அவற்றைக் கையாள்வதில் உள்ள நுட்பங்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து விளக்க உரையாற்றினாா். வணிகவியல் துறை இரண்டாமாண்டு மாணவி எஸ். மோனிகாஸ்ரீ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினாா். இதில், வணிகவியல் துறையைச் சோ்ந்த சுமாா் 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனா். விழா ஏற்பாடுகளை வணிகவியல் துறைத்தலைவி ஆா். ஷீலாஜெருசா மற்றும் பேராசிரியா்கள் செய்திருந்தனா்.
கல்லூரி முதல்வா் முனைவா் எம் சுபலெட்சுமி வரவேற்றாா். இளங்கலை வணிகவியல்துறை மூன்றாமாண்டு மாணவி பி. கல்கியா நன்றி கூறினாா்.