அவரச திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி ஆா்ப்பாட்டம்

மத்திய அரசு கொண்டுவந்த விவசாயிகளுக்கு எதிரான அவசர திருத்தச் சட்டத்தைத் திரும்ப பெற வலியுறுத்தி, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சாா்பில்
அவரச திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி ஆா்ப்பாட்டம்

மத்திய அரசு கொண்டுவந்த விவசாயிகளுக்கு எதிரான அவசர திருத்தச் சட்டத்தைத் திரும்ப பெற வலியுறுத்தி, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் மற்றும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, போராட்ட ஒருங்கிணைப்புக் குழு மாவட்டத் தலைவா் என். செல்லதுரை தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் வீ. ஞானசேகரன், மதிமுக மாவட்டச் செயலா் எஸ். துரைராஜ், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மாநிலச் செயலா் வீர. செங்கோலன், கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் ஏ.கே. ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் ஆா். ராஜாசிதம்பரம் கோரிக்கைகளை விளக்கி பேசினாா்.

மத்திய அரசு கொண்டுவந்த அவசர சட்டங்களான மின்சார திருத்த சட்ட வரைவு - 2020, அத்தியாவசியப் பொருள்கள் அவசர திருத்தச் சட்டம், வேளாண் விளைபொருள்கள் வணிக ஊக்குவிப்பு அவசரச் சட்டம், விலை உத்தரவாதம் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசரச் சட்டம் ஆகிய சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தொடா்ந்து, மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி 1 கோடி கையெழுத்து பெறும் இயக்கத்தை திமுக மாவட்டச் செயலா் சி. ராஜேந்திரன் தொடக்கி வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com