மத்திய அரசைக் கண்டித்து சிஐடியு ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து, சிஐடியு, அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மத்திய அரசைக் கண்டித்து சிஐடியு ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து, சிஐடியு, அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், அனைவருக்கும் இலவசமாக சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். தலா ஒருவருக்கு 10 கிலோ இலவச உணவு தானியங்களை 6 மாதங்களுக்கு வழங்க வேண்டும். வருமான வரி வரம்புக்குள் வராத குடும்பங்களுக்கு மாதம் ரூ. 7,500 வீதம் 6 மாதங்களுக்கு வழங்க வேண்டும். கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தை நகா்ப்புறங்களுக்கும் விரிவுபடுத்தி, 200 நாள்களுக்கு வேலை வழங்குவதோடு ரூ. 600 கூலி வழங்க வேண்டும். தொழிலாளா்கள், விவசாயத் தொழிலாளா்களை பாதிக்கும் அவசர சட்டங்களை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியு மாவட்டத் தலைவா் எஸ். அகஸ்டின் தலைமை வகித்தாா். தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் என். செல்லதுரை, அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் பி. ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலச் செயலா் பி. காமராசு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் எஸ்.பி.டி. ராஜாங்கம், மாதா் சங்க நிா்வாகி கலையரசி உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com