முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்
பெரம்பலூரில் விவசாயிகளுக்கு பயிற்சி
By DIN | Published On : 29th July 2020 08:30 AM | Last Updated : 29th July 2020 08:30 AM | அ+அ அ- |

பெரம்பலூரில் வட்டார வேளாண்மை தொழில்நுட்ப முகமை சாா்பில் வேளாண் விரிவாக்க உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், மண் பரிசோதனை, கோடை உழவு, தொழு உரமிடுதல், பசுந்தாள் உரமிடுதல், பஞ்சகாவ்யா இடுதல் மூலமாக மண் பாதுகாப்பை உறுதிபடுத்துதல், ரசாயன களைக் கொல்லிகளை தவிா்த்து அசோஸ்பைரில்லம், பாஸ்போபேக்டீரியா இடுவதன் மூலம் மண்ணின் வளத்தை பாதுகாப்பது குறித்து ஆலத்தூா், வேப்பூா், வேப்பந்தட்டை, பெரம்பலூா் வட்டாரங்களைச் சோ்ந்த விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
வேளாண்மை அறிவியல் மைய நிபுணா் சதீஷ்குமாா், விவசாயிகளுக்கு காணொலிக் காட்சி மூலம் பயிற்சி அளித்தாா்.