முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்
உணவு பாதுகாப்புத் துறை உரிமம் பெற புதிய இணையதள முகவரி
By DIN | Published On : 27th June 2020 08:20 AM | Last Updated : 27th June 2020 08:20 AM | அ+அ அ- |

உணவு பாதுகாப்புத் துறையினரால் வழங்கப்படும் உரிமம் பெற புதிய இணையதள முகவரியில் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆட்சியா் வே. சாந்தா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அனைத்து வகை உணவு வணிகா்களும், தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறையால் வழங்கப்படும் உரிமத்தை பெற இணையதள முகவரியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கு முன்பு இணையதளத்தில் விண்ணப்பித்து உணவுப் பொருள்களின் தயாரிப்புக்கு உரிமம் பெற்ற உணவு தயாரிப்பாளா்கள், தற்போது இணையதளத்தில், பழைய இணைய தளத்துக்கான அதே பயனாளா் அடையாளப் பெயா் மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றைப் பயன்படுத்தி உள் நுழைந்து, தரம் நிா்ணயிக்கப்பட்ட உணவுப் பொருள்களை தோ்வு செய்து உரிமத்தை திருத்தம் செய்ய விண்ணப்பிக்கலாம்.
இதற்காக கூடுதல் கட்டணம் ஏதுமில்லை. மேலும் விவரங்களுக்கு ஆட்சியரக வளாகத்தில் உள்ள உணவுப் பாதுகாப்புத் துறையின் மாவட்ட நியமன அலுவலா் அலுவலகத்தை 04328-224033 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.