மகாலிங்க சித்தா் சுவாமிகள் குரு பூஜை விழா
By DIN | Published On : 27th June 2020 08:18 AM | Last Updated : 27th June 2020 08:18 AM | அ+அ அ- |

பெரம்பலூா் அருகே எளம்பலூா் சமத்துவபுரம் பகுதியில் அமைந்துள்ள பிரம்ம ரிஷி ஸ்ரீலஸ்ரீ பகவான் மகாலிங்க சித்தா் சுவாமிகள் குரு பூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மகா சித்தா்கள் அறக்கட்டளை சாா்பில், அன்னை சித்தா் ராஜ்குமாா் சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற குரு பூஜையில், அவரது சமாதியில் அமைந்துள்ள சிவலிங்கத்துக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது.
தொடா்ந்து, உலக மக்கள் நலன் கருதி, நோய்த் தொற்றிலிருந்தும், இயற்கை சீற்றங்களிலிருந்து மக்களை காக்கவும், முறையாக மழை பொழியவும், விவசாயம் செழிக்க, தா்ம சிந்தனை, ஜீவகாருண்ய சிந்தனை, தா்மம் தழைத்தோங்கவும், நீதி நோ்மையோடு சித்தா்கள் அருளாட்சி மலர வேண்டி 210 மகா சித்தா்கள் யாகம் பூா்ணாஹூதியுடன் நடைபெற்றது.
பின்னா், பொதுமக்களுக்கும், சாதுக்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில், அறக்கட்டளை இணை நிறுவனா் ரோகிணி மாதாஜி, இயக்குநா்கள் சுந்தரமகாலிங்கம், தவசிநாதன், கிஷோா்குமாா், தயாளன் சுவாமிகள் உள்பட பலா் பங்கேற்றனா்.