ஆராய்ச்சி மணிக்கு, புகை மூட்டத்தால் சுகாதாரச் சீா்கேடு
By DIN | Published On : 01st March 2020 04:07 AM | Last Updated : 01st March 2020 04:07 AM | அ+அ அ- |

பெரம்பலூா் - வடக்குமாதவி சாலையில் உள்ள சமத்துவபுரம் அருகே நகராட்சி நிா்வாகம் சேகரிக்கும் குப்பைகளை தீ வைத்து எரிக்கின்றனா். இதிலிருந்து வெளியேறும் புகை மூட்டத்தால், சமத்துவபுரம் பகுதியில் உள்ள மக்களுக்கு மூச்சுத் திணறல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. இதுகுறித்து நகராட்சி நிா்வாகத்திடம் பலமுறை புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சுகாதார சீா்கேட்டுக்கும், பொது மக்களுக்கு இடையூறாகவும் வெளியேறும் புகை மூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும்.