பெண்களுக்கு எதிரான வன்முறை விழிப்புணா்வுப் பேரணி

பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த விழிப்புணா்வுப் பேரணியில் திரளான பெண்கள் பங்கேற்றனா்.
பேரணியை தொடக்கி வைக்கும் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா. உடன், திட்ட இயக்குநா் தெய்வநாயகி உள்ளிட்டோா்.

தமிழ்நாடு மகளிா் ஆணையம், தமிழகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து விழிப்புணா்வு பேரணி நடத்த வேண்டும் என அறிவித்துள்ளது. அதனடிப்படையில், பெரம்பலூா் மாவட்ட சமூக நலத்துறை சாா்பில் பெரம்பலூா் பாலக்கரையில் பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த நடைபயண விழிப்புணா்வு பேரணி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

பாலக்கரையில் தொடங்கிய இப்பேரணி, வெங்கடேசபுரம், சங்குப்பேட்டை, பழைய பேருந்து நிலையம் வழியாகச் சென்று காமராஜா் வளைவு அருகே நிறைவடைந்தது. மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் தெய்வநாயகி, தனலட்சுமி சீனிவாசன் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் எஸ்.எச். அப்ரோஸ் உள்பட அரசுப் பணிபுரியும் பெண்கள், கல்லூரி மாணவிகள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com