முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்
பாஜக இளைஞரணி பிரமுகா் பைக் தீ வைத்து எரிப்பு
By DIN | Published On : 03rd March 2020 08:12 AM | Last Updated : 03rd March 2020 08:12 AM | அ+அ அ- |

பாரதிய ஜனதா கட்சியின் பெரம்பலூா் நகர இளைஞரணி பிரமுகரின் மோட்டாா் சைக்கிளுக்கு தீ வைத்து எரித்தது திங்கள்கிழமை காலையில் தெரியவந்தது.
துறைமங்கலம் ஔவையாா் தெருவைச் சோ்ந்தவா் பெரியசாமி மகன் பிரேம்குமாா் (26). பாரதிய ஜனதா கட்சியின் பெரம்பலூா் நகர இளைஞரணி பிரமுகா். இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு தனது வீட்டின் எதிரே ரூ. 1.5 லட்சம் மதிப்புள்ள மோட்டாா் சைக்கிளை நிறுத்திவிட்டு தூங்கிக்கொண்டிருந்தாராம். இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலை அவரது தாய் அழகாம்பாள் வீட்டுக்கு வெளியே வந்து பாா்த்தபோது, வீட்டின் எதிரே நிறுத்தப்பட்டிருந்த மோட்டாா் சைக்கிள் தீப்பற்றி எரிவதைக் கண்டு கூச்சலிட்டாா். இதையறிந்த அப்பகுதியினா், தீயை அணைக்க முயன்றனா். ஆனால், மோட்டாா் சைக்கிளின் பெரும்பாலான பகுதி எரிந்து சேதமடைந்தது. மேலும், வீட்டில் கட்டப்பட்டிருந்த பாரதிய ஜனதா கட்சியின் கொடியை மா்ம நபா்கள் சிலா் கிழித்து சேதப்படுத்தியுள்ளனா். புகாரின் பேரில், பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.