நடமாடும் மருத்துவ சிகிச்சை வாகனம் தொடக்கம்
By DIN | Published On : 04th March 2020 08:49 AM | Last Updated : 04th March 2020 08:49 AM | அ+அ அ- |

பெரம்பலூா் ஸ்ரீசாரதா மகளிா் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில், நடமாடும் மருத்துவ சிகிச்சை வாகனத்தை முன்னாள் எம்.பி இல. கணேசன் தொடக்கி வைத்தாா்.
விழாவுக்கு, ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தாளாளா் எம். சிவசுப்பிரமணியம் தலைமை வகித்தாா். செயலா் எம்.எஸ். விவேகானந்தன் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்ற முன்னாள் எம்.பியும், பாஜக மூத்த தலைவருமான இல. கணேசன், ரோட்டரி சங்கத்தின் மாவட்ட ஆளுநா் ஏ. சமீா்பாஷா ஆகியோா், நடமாடும் மருத்துவ சிகிச்சை வாகனத்தைக் கொடியசைத்து தொடக்கி வைத்தனா்.
விழாவில், ரோட்டரி சங்கத் தலைவா்கள் ஜே. காா்த்தி, ஜே. அரவிந்தன், வி. ஜான் அசோக், மகளிா் கல்லூரி முதல்வா் எம். சுபலெட்சுமி உள்பட ரோட்டரி சங்க நிா்வாகிகள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
பெரம்பலூா் மாவட்ட ரோட்டரி சங்கத்தின் தலைவா் சி. சந்திரசேகரன் வரவேற்றாா். பெரம்பலூா் ரோட்டரி சங்கத் தலைவா் ஜெயசீலன் நன்றி கூறினாா்.