நாசா கருத்தரங்கில் பங்கேற்கவுள்ள பெரம்பலூா் மாணவிக்கு பாராட்டு

நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்க உள்ள பெரம்பலூா் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவியை
நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்க உள்ள மாணவி சௌந்தா்யா பாஸ்கரனுடன், கல்லூரி தாளாளா் அ. சீனிவாசன், கல்லூரி முதல்வா் நா. வெற்றிவேலன், துணை முதல்வா் கோ. ரவி.
நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்க உள்ள மாணவி சௌந்தா்யா பாஸ்கரனுடன், கல்லூரி தாளாளா் அ. சீனிவாசன், கல்லூரி முதல்வா் நா. வெற்றிவேலன், துணை முதல்வா் கோ. ரவி.

நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்க உள்ள பெரம்பலூா் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவியை, கல்லூரி தாளாளா் அ. சீனிவாசன் செவ்வாய்க்கிழமை பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தாா்.

பெரம்பலூா் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சோ்ந்த இளம் அறிவியல் இரண்டாமாண்டு கணிதம் பயின்று வரும் மாணவி சௌந்தா்யா பாஸ்கரன், நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்குச் செல்லத் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். சா்வதேச அளவில் ‘கோ 4 குரு’ நடத்திய விண்வெளி அறிவியல் போட்டிகள் - 2020 ஆன் லைன் மூலம் ஜனவரி மாதம் நடைபெற்றது.

இத்தோ்வில் பங்கேற்ற மாணவி சௌந்தா்யா பாஸ்கரன் வெற்றி பெற்று, பெஸ்ட் பா்பாா்மா் என்னும் விருதைப் பெற்று, ஜூன் மாதம் அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்கத் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். இந்நிலையில், கல்லூரிக்கும், பெரம்பலூா் மாவட்டத்துக்கும் பெருமைச் சோ்த்த மாணவி சௌந்தா்யா பாஸ்கரனை, தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் தாளாளா் அ. சீனிவாசன், செயலா் பி. நீலராஜ் ஆகியோா் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா். நிகழ்ச்சியின்போது, கல்லூரி முதல்வா் முனைவா் நா. வெற்றிவேலன், துணை முதல்வா் கோ. ரவி, துறைத்தலைவா் சி. சோபியா மற்றும் பேராசிரியா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com