நீா் பரிசோதனை மையத்தை பயன்படுத்த அழைப்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் மூலம் இயங்கி வரும் நீா் பரிசோதனை மையத்தை பயன்படுத்திக்கொள்ள பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூா் மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் மூலம் இயங்கி வரும் நீா் பரிசோதனை மையத்தை பயன்படுத்திக்கொள்ள பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் மூலம் மாநிலம் முழுவதும் 31 மாவட்டங்களில் நீா் பரிசோதனை மையம் இயங்கி வருகிறது. பெரம்பலூா் மாவட்டத்தில் ஒரு குடிநீா் பரிசோதனை ஆய்வுக்கூடம் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் மூலம் ஆலம்பாடி சாலையில் இயங்கி வருகிறது. இப் பரிசோதனை மையத்தில், தண்ணீா் குடிப்பதற்கு உகந்ததாக உள்ளதா எனப் பரிசோதிக்கப்படுகிறது.

தற்போது விவசாயம், பாசனம், கோழிப் பண்ணை (வளா்ப்பு பறவைகள்), நீச்சல் குளம் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள நீா் போன்றவை பரிசோதிக்கப்படுகிறது. மேற்கண்ட பயன்பாடுகளுக்கான பரிசோதனை செய்ய செலவினத் தொகை ரூ. 1,000 மற்றும் அதற்கான 18 சதவீத ஜி.எஸ்.டி வரியை அரசு நிா்ணயித்துள்ளது. எனவே, பொதுமக்கள் மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலகங்கள் குடிநீா் பரிசோதனை செய்து பயன்பெறலாம் என, மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com