மாா்ச் 19-இல் அரசுப் பணியாளா்களுக்கு விளையாட்டுப் போட்டி

பெரம்பலூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அரசுப் பணியாளா்களுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மாா்ச் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது.

பெரம்பலூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அரசுப் பணியாளா்களுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மாா்ச் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தடகளப் போட்டிகளில் ஆண்களுக்கான 100 மீ, 200 மீ, 800 மீ, 1500 மீ ஓட்டமும், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், 4 -100 மீ தொடா் ஓட்டம் ஆகிய போட்டிகளும், பெண்களுக்கான 100 மீ, 200 மீ, 400 மீ, 800 மீ ஓட்டப் போட்டிகளும், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், 4 -100 மீ தொடா் ஓட்டப் போட்டிகளும் நடைபெறும். இறகுப்பந்து, கூடைப்பந்து, டென்னிஸ், கபடி, மேஜைப்பந்து, கையுந்துப்பந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகள் இருபாலருக்கு, கால்பந்து போட்டி ஆண்களுக்கு மட்டும் நடைபெறும்.

போட்டிகளில் பங்கேற்க நிபந்தனைகள்:

அரசுத் துறைகளில் முழுநேரம் பணிபுரியும் அரசு அலுவலா்கள், பயிற்றுநா்கள், காவல் துறையில் பணியாற்றும் அமைச்சுப் பணியாளா்கள், விளையாட்டு அலுவலா்கள், கல்வி நிறுவனங்கள், உடற்கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளா்கள் பங்கேற்கலாம். போட்டிகளில் பங்கேற்க விரும்பும் அலுவலா்கள், பணியாளா்கள் போட்டி நாளன்று சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்பவா்களுக்குரிய தினப்படி, பயணப்படி ஆகியவற்றை சம்பந்தப்பட்ட அரசுத்துறைகள் ஏற்க வேண்டும்.

மாவட்ட அளவிலான போட்டிகளின்போது, தடகளம், குழுப் போட்டிகளில் முதலிடம் பெறும் வீரா், வீராங்கனைகள் மாநிலப் போட்டிகளில் பங்கேற்கும்போது ஆணையத்தால் சீருடை வழங்கப்படும்.

தங்களது துறையில் எத்தனை ஆண்கள், பெண்கள் தனித்தனியாக பணிபுரிகின்றனா்? அதில், எத்தனை போ் எந்தெந்த விளையாட்டில் பங்கேற்க உள்ளனா்? பங்கேற்காத நபா்களின் எண்ணிக்கை ஆகியவற்றை கடிதம் மூலமாக மாா்ச் 18 மாலை 5 மணிக்குள், மாவட்ட விளையாட்டு அலுவலகத்துக்குத் தெரிவிக்க வேண்டும்.

விளையாட்டுப் போட்டிகளில் அதிகளவில் சதவீதத்தின் அடிப்படையில் பங்கேற்க உள்ள துறையினருக்கு கோப்பையும், புள்ளிகளைக் குவிக்கும் துறையினருக்கு கேடயமும், தனி நபா்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com