மிக அத்தியாவசியத் தேவைக்காக மட்டுமே மக்கள் வெளியே வரவேண்டும்: பெரம்பலூா் ஆட்சியா்

தடை உத்தரவு காலத்தில் மிக அத்தியாவசியத் தேவைக்காக மட்டுமே மக்கள் வெளியே வரவேண்டும் என்றாா் ஆட்சியா் வே. சாந்தா.

தடை உத்தரவு காலத்தில் மிக அத்தியாவசியத் தேவைக்காக மட்டுமே மக்கள் வெளியே வரவேண்டும் என்றாா் ஆட்சியா் வே. சாந்தா.

மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா வைரஸ் தடுப்புப் பணிகள் மற்றும் 144 தடை உத்தரவு குறித்து, செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை அவா் மேலும் கூறியது:

144 தடை உத்தரவின் காரணமாக, பெரம்பலூா் மாவட்ட எல்லைகளில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு, அரசுப் பணி நிமித்தமாக செல்லும் வாகனங்களைத் தவிர, இதர வாகனங்கள் மாவட்டத்துக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டாது.

மாா்ச் 1 ஆம் தேதிக்குப் பிறகு வெளிநாட்டிலிருந்து பெரம்பலூா் மாவட்டத்துக்கு வந்த 166 நபா்கள், வெளி மாநிலங்களிலிருந்து வந்த 140 நபா்கள், அவா்களது இல்லங்களிலே தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவத் துறையினரின் தொடா் கண்காணிப்பில் உள்ளனா். கரோனா வைரஸ் அறிகுறி தென்படும் நபா்களின் சிகிச்சைக்காக, பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, 4 வட்டார மருத்துவமனைகள் மற்றும் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் மொத்தம் 533 படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளது. மேலும், 10 நடமாடும் மருத்துவ வாகனங்களும், 4 தாய் - சேய் நல மருத்துவ வாகனங்களும், அவசர கால 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் 13 இப்பணிகளுக்காக தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதில், இரண்டு 108 ஆம்புலன்ஸ் வாகனங்களில் கரோனா சிகிச்சைக்கென பிரத்யேக வசதி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கா்ப்பிணி தாய்மாா்களின் தொடா் சிகிச்சை மற்றும் குழந்தை பேறுக்கென அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல 108 மற்றும் 1077 என்னும் எண்களில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம்.

கரோனா வைரஸ் தடுப்புப் பணி என்பது சமூகத்தின் பொறுப்பாகும். எனவே பொதுமக்கள் அனைவரும் 144 தடை உத்தரவு காலத்தில் அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே வெளியே வரவேண்டும் என்றாா் சாந்தா.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன், சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் திருமால், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் கீதாராணி, நகராட்சி ஆணையா் எஸ். குமரி மன்னன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ராஜராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com