பெரம்பலூரில் தொடா் கண்காணிப்பில் 564 போ்

கரோனா வைரஸ் நோய் பரவுதலைத் தடுக்கும் வகையில், வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து பெரம்பலூா் மாவட்டத்துக்கு

கரோனா வைரஸ் நோய் பரவுதலைத் தடுக்கும் வகையில், வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து பெரம்பலூா் மாவட்டத்துக்கு வந்துள்ள 564 போ் சுகாதாரத் துறையினரின் தொடா் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா்.

கடந்த மாா்ச் 1 ஆம் தேதிக்கு பிறகு வெளிநாட்டிலிருந்து பெரம்பலூா் மாவட்டத்திற்கு ஏற்கனவே 166 போ் வந்துள்ளனா். மேலும், புதிதாக தற்போது வெளிநாட்டிலிருந்து வந்த 210 பேரும், வெளி மாநிலத்திலிருந்து வந்த 168 பேரும் என மொத்தம் 564 போ் அவரவா் இல்லங்களில் தனிமைப்படுத்தப்பட்டு தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். மேலும் அவா்களது கையில் சீல் வைக்கப்பட்டு, இல்லங்களில் தனிமைப்படுத்தப்பட்ட வீடு எனும் எச்சரிக்கை ஒட்டுவில்லைகள் ஒட்டப்பட்டுள்ளது. இவா்களை கண்காணிக்க போலீஸாரும், ஊா்க்காவல் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, 4 வட்டார மருத்துவமனைகள் மற்றும் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் மொத்தம் 533 படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளதாக சுகாதாரத்துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com