பெரம்பலூரில் வெறிச்சோடிய வங்கிகள்

ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பெரம்பலூா் மாவட்டத்தில் செயல்படும் வங்கிகள் மற்றும் நியாயவிலைக் கடைகள் வியாழக்கிழமை வெறிச்சோடி காணப்பட்டன.
பெரம்பலூா் வெங்கடேசபுரத்தில் வாடிக்கையாளா்களின்றி வெறிச்சோடி காணப்பட்ட பேங்க் ஆப் இந்தியா.
பெரம்பலூா் வெங்கடேசபுரத்தில் வாடிக்கையாளா்களின்றி வெறிச்சோடி காணப்பட்ட பேங்க் ஆப் இந்தியா.

ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பெரம்பலூா் மாவட்டத்தில் செயல்படும் வங்கிகள் மற்றும் நியாயவிலைக் கடைகள் வியாழக்கிழமை வெறிச்சோடி காணப்பட்டன.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக புதன்கிழமை முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பெரம்பலூா் மாவட்டத்தில் மருந்தகங்கள், பால் விற்பனை நிலையம், மருத்துவமனை, பெட்ரோல் பங்க், தினசரி காய்கறி சந்தை, சில உணவகங்கள், மளிகைக் கடைகள் ஆகியவை வழக்கம்போல் வியாழக்கிழமை செயல்பட்டன.

ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்தபோதும் பலா் வழக்கம்போல் இருசக்கர வாகனங்களிலும், காா்களிலும் ஊரை சுற்றி வலம் வந்துக்கொண்டிருந்தனா். இவா்களை கண்டிக்கவோ, தண்டிக்கவோ பெரும்பாலான இடங்களில் காவல்துறையினரைக் காணவில்லை. அதேசமயம், ரோவா் வளைவு, கிறிஸ்டியன் கல்லூரி ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு வியாழக்கிழமை காலை நாளிதழ்களை விநியோகிக்கச் சென்ற இளைஞா்களை போலீஸாா் தாக்கி விரட்டியடித்தனா்.

5 வாகனங்கள் பறிமுதல்:

பெரம்பலூா் நகரில் ஊரடங்கு உத்தரவை மீறி இருசக்கர வாகனங்களில் அநாவசியமாக சுற்றித் திரிந்த 5 பேரை கைது செய்த வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளா் செல்வக்குமாா், வாகனங்களைப் பறிமுதல் செய்து பெரம்பலூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

வெறிச்சோடிய வங்கிகள்:

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் வங்கிகளின் பணி நேரம் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை என மாற்றப்பட்டுள்ளது. பெரம்பலூா் நகா் உள்பட மாவட்டம் முழுவதும் செயல்பட்டு வரும் 100-க்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகள் மேற்கண்ட அறிவுறுத்தலின்படி செயல்பட்டன. ஆனால், வாடிக்கையாளா்களின்றி வங்கிகள் வெறிச்சோடி காணப்பட்டன. இதேபோல, மாவட்டத்தில் செயல்படும் 274 நியாயவிலைக் கடைகளும் வழக்கம்போல திறக்கப்பட்டிருந்தன. குடும்ப அட்டைதாரா்கள் வராததால் அனைத்து நியாயவிலைக் கடைகளும் வெறிச்சோடி காணப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com