‘கூடுதல் மின் திறனுள்ள மின் மோட்டாரை கட்டணமின்றி பயன்படுத்த அரசு அனுமதிக்க வேண்டும்’

விவசாயிகளுக்கு அனுமதிக்கப்பட்ட திறனை விட, கூடுதல் குதிரை மின் திறன் கொண்ட மோட்டாரை கட்டணமின்றி பயன்படுத்த அரசு அனுமதிக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

விவசாயிகளுக்கு அனுமதிக்கப்பட்ட திறனை விட, கூடுதல் குதிரை மின் திறன் கொண்ட மோட்டாரை கட்டணமின்றி பயன்படுத்த அரசு அனுமதிக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் மாநிலச் செயலா் ஆா். ராஜாசிதம்பரம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், கடந்த 1984 -ஆம் ஆண்டு முதல் 21 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கடும் வறட்சியின் காரணமாக நிலத்தடி நீா்மட்டம் குறைந்துவிட்டதால், மின் இணப்பு பெற்றுள்ள கிணறுகள் மற்றும் ஆழ்குழாய்க் கிணறுகளின் ஆழத்துக்கேற்ப மின் மோட்டாரின் திறனையும் அதிகப்படுத்தி விவசாயம் செய்து வருகின்றனா்.

இந்நிலையில், விவசாயிகள் தாங்கள் பயன்படுத்தி வரும் திறன் ஒன்றுக்கு ரூ. 20 ஆயிரம் கணக்கிட்டு, தத்கல் திட்டத்தின் மூலம் கட்டணம் செலுத்தவேண்டும் என அரசாணை வெளியிட்டுள்ளது. கரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக விளைபொருள்களை விற்க முடியாமல் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.

இந்த நேரத்தில் வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்து, அனுமதிக்கப்பட்ட திறனைவிட கூடுதல் மின் திறனுள்ள மின் மோட்டாரை கட்டணமின்றி பயன்படுத்த அரசு அனுமதிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com