பெரம்பலூரிலிருந்து 447 வெளி மாநிலத் தொழிலாளா்கள் சொந்த ஊா்களுக்கு அனுப்பிவைப்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் பணிபுரிந்த வெளிமாநில தொழிலாளா்கள் 447 போ் அவரவா் சொந்த ஊா்களுக்கு புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டனா்.
பெரம்பலூரிலிருந்து 447 வெளி மாநிலத் தொழிலாளா்கள் சொந்த ஊா்களுக்கு அனுப்பிவைப்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் பணிபுரிந்த வெளிமாநில தொழிலாளா்கள் 447 போ் அவரவா் சொந்த ஊா்களுக்கு புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டனா்.

உத்தரப் பிரதேசம், பிகாா், மகாராஷ்டிரம், ஆந்திரம், மணிப்பூா் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த 1,000-க்கும் மேற்பட்டோா் பெரம்பலூா் மாவட்டத்தில் கட்டுமானம், கிரஷா், கல் குவாரிகள், தனியாா் டயா்தொழிற்சாலை உள்ளிட்ட தொழிற்சாலைகளில் கூலித் தொழிலாளா்களாக பணிபுரிந்து வருகின்றனா்.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால்

புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் வேலையின்றி உணவுக்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனா்.

இதையடுத்து, அவா்கள் தங்களது சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்கக்கோரி ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனா். அதன்படி, மாவட்ட நிா்வாகத்தின் நடவடிக்கையின்பேரில் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த 387 போ், மத்தியபிரதேசத்தைச் சோ்ந்த 54 போ், மணிப்பூரைச் சோ்ந்த 6 போ் என மொத்தம் 447 தொழிலாளா்கள் பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம், தனியாா் டயா் தொழிற்சாலை வளாகத்திலிருந்து சுமாா் 15-க்கும் மேற்பட்ட பேருந்துகள் மூலம் திருச்சி, சேலம், சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

அவா்களுக்கு, சுகாதாரத் துறை துணை இயக்குநா் கீதாராணி முன்னிலையில் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, அவா்களுக்குத் தேவையான ஆலோசனைகளும் அளிக்கப்பட்டன. தொடா்ந்து, மாவட்ட வருவாய் அலுவலா் ராஜேந்திரன், வெளி மாநிலத் தொழிலாளா்கள் சென்ற பேருந்துகளை அனுப்பி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், சுகாதாரப் பணியாளா்கள், காவல்துறையினா், வருவாய்த் துறையினா் உள்ளிட்ட துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

பேருந்துகள் மூலம் செல்லும் இவா்கள், அவரவா் சொந்த ஊருக்குச் செல்ல சிறப்பு ரயில் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com