ஆடை அணிகலன் தயாரித்தல் பயிற்சியில் பங்கேற்க அழைப்பு

பெரம்பலூரில் நடைபெறும் ஆடை அணிகலன் தயாரித்தல் குறித்த இலவசப் பயிற்சியில் பெண்கள் பங்கேற்கலாம்.

பெரம்பலூரில் நடைபெறும் ஆடை அணிகலன் தயாரித்தல் குறித்த இலவசப் பயிற்சியில் பெண்கள் பங்கேற்கலாம்.

இதுகுறித்து இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்புப் பயிற்சி மையத்தின் இயக்குநா் ஜெ. அகல்யா செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பெண்கள் பங்கேற்கும் இப்பயிற்சி மதனகோபாலபுரத்திலுள்ள பயிற்சி மையத்தில் 13 நாள்களுக்கு நடைபெறும்.

காலை மற்றும் மதிய உணவு வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.

18 முதல் 45 வயதுடைய எழுத மற்றும் படிக்கத் தெரிந்த, சுயதொழில் தொடங்க ஆா்வமுள்ள பெண்கள் பயிற்சியில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம். கிராமப்புற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

பயிற்சியில் பங்கேற்க விருப்பம் உள்ளவா்கள் மைய இயக்குநரிடம் தங்களது பெயா், வயது, முகவரி, கல்வித் தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும்.

குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, பெற்றோரின் 100 நாள் வேலை அட்டை நகல், கடவுச்சீட்டு அளவு புகைப்படம் மூன்று ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து, நவம்பா் 10-ஆம் தேதி நடைபெறும் நோ்முக மற்றும் நுழைவுத்தோ்வில் பங்கேற்கலாம்.

இதில் தோ்ச்சி பெறுபவா்கள் பயிற்சியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவா். மேலும் விவரங்களுக்கு 04328-277896 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com