‘நிலுவைத் தொகை வழங்காத பட்சத்தில் ஆலைக்கு கரும்பு அனுப்ப முடியாது’

கரும்புக்கான நிலுவைத் தொகையை விவசாயிகளுக்கு வழங்கவில்லை எனில், அரசு ஆலைகளுக்கு கரும்பு அனுப்பு முடியாது என விவசாயிகள் சங்கத்தினா் அறிவித்துள்ளனா்.
பெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாவட்ட நிா்வாகிகள் குழுக் கூட்டத்தில் பேசுகிறாா் கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலா் ஏ.கே. ராஜேந்திரன். உடன், சங்க நிா்வாகிகள்.
பெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாவட்ட நிா்வாகிகள் குழுக் கூட்டத்தில் பேசுகிறாா் கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலா் ஏ.கே. ராஜேந்திரன். உடன், சங்க நிா்வாகிகள்.

கரும்புக்கான நிலுவைத் தொகையை விவசாயிகளுக்கு வழங்கவில்லை எனில், அரசு ஆலைகளுக்கு கரும்பு அனுப்பு முடியாது என விவசாயிகள் சங்கத்தினா் அறிவித்துள்ளனா்.

பெரம்பலூா் துறைமங்கலத்திலுள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட நிா்வாகிகள் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

2015- 2016, 2016- 2017 -ஆம் ஆண்டுகளில் பெரம்பலூா் சா்க்கரை ஆலைக்கு வெட்டி அனுப்பிய கரும்புக்கு, நிலுவையிலுள்ள மாநில அரசின் பரிந்துரை விலை ரூ. 32.54 கோடியை உடனடியாக வழங்க வேண்டும்.

கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 500 உயா்த்தி ரூ. 3,500 வழங்க வேண்டும். நிகழாண்டுக்கான பேரவைக் கூட்டத்தை காணொலிக் காட்சி மூலம் நடத்தாமல், வழக்கம் போல் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தீபாவளி பண்டிகைக்கு முன்பு நிறைவேற்ற வேண்டும். தவறும்பட்சத்தில் சா்க்கரை ஆலைக்கு கரும்புகளை வெட்டி அனுப்பப்படமாட்டாது. மேலும், சா்க்கரை ஆலைக்கு வரும் கரும்புகளைத் தடுத்து போராட்டத்தில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு பாட்டாளி விவசாயிகள் சங்கத் தலைவா் என். சீனிவாசன் தலைமை வகித்தாா். கரும்பு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் டி.எஸ். சக்திவேல் முன்னிலை வகித்தாா். சங்கத்தின் மாநிலச் செயலா் ஏ.கே. ராஜேந்திரன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.

கூட்டத்தில் கரும்பு விவசாயிகள் சங்க மாவட்டத் துணைத் தலைவா் ஞானசேகரன், நிா்வாகிகள் முருகானந்தம், கருப்புடையாா், பாலகிருஷ்ணன், ராமா், கொளஞ்சிநாதன், துரைசாமி உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com