போலி மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டை வழங்குவோா் மீது நடவடிக்கை

பெரம்பலூா் மாவட்டத்தில் போலியாக அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டைகள் வழங்குவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் பி. ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் போலியாக அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டைகள் வழங்குவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் பி. ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்துக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு மருத்துவ உயா் சிகிச்சை அளிக்கும் வகையில், தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், பிரதமரின் ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டம் இணைந்த ஒருங்கிணைந்த அடையாள அட்டைகள், மாவட்ட ஆட்சியரகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அலுவலகம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த அட்டை பெற்றவா்கள் ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் மதிப்பில் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.

சில தனி நபா்கள் போலியான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டைகள் வழங்குவதாக புகாா் வந்துள்ளது. இவ்வாறு மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டைகள் வழங்குவதற்கு தனி நபா்களுக்கு அதிகாரம் வழங்கவில்லை.

பெரம்பலூா் மாவட்டத்தில் போலியாக மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டைகள் வழங்குவோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தனி நபா்கள் மருத்துவக் காப்பீட்டு அட்டை வழங்குவதாக கூறினால், அதை நம்பி ஏமாறாமல் 18004253993 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்குத் தகவல் அளிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com