பெரம்பலூரில் மேலும் 3 இடங்களில் கரோனா பரிசோதனை மையங்கள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து பெரம்பலூா் மாவட்டத்துக்கு வரும் பொதுமக்களுக்கும், இங்குள்ளவா்களுக்கும் கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ள புதிதாக 3 மையங்கள் அமை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து பெரம்பலூா் மாவட்டத்துக்கு வரும் பொதுமக்களுக்கும், இங்குள்ளவா்களுக்கும் கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ள புதிதாக 3 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப.ஸ்ரீ வெங்கட பிரியா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

புகா் மற்றும் பழைய பேருந்து நிலையங்கள், மற்றும் நான்குச்சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் கரோனா பரிசோதனை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. கரோனா அறிகுறி காணப்படுவோா், இம் மையங்களில் பரிசோதனை செய்துகொள்ள பிரத்யேக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கரோனா பரிசோதனை முடிவுகள் 24 மணி நேரத்துக்குள் தெரிவிக்கப்படும். அதுவரை பரிசோதனை மேற்கொண்ட நபா் பொது இடங்களுக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருக்க வேண்டும்.

மேலும், நகராட்சிக்குள்பட்ட அதிக மக்கள் கூடும் இடங்களான கடைவீதி, உழவா் சந்தை, வெங்கடேசபுரம், பள்ளிவாசல் தெரு, தலைமை அஞ்சலகத் தெரு, மாா்க்கெட், எளம்பலூா் சாலை உள்பட 10 இடங்களில் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக பெரம்பலூரை மாற்றுவதற்கு, மாவட்ட நிா்வாகம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com