ஒலி, மாசில்லா தீபாவளி கொண்டாட அறிவுறுத்தல்

பெரம்பலூா் மாவட்டத்தில் மாசு இல்லாத தீபாவளியை கொண்டாட அனைவரும் முன்வர வேண்டும் என ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கட பிரியா அறிவுறுத்தியுள்ளாா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் மாசு இல்லாத தீபாவளியை கொண்டாட அனைவரும் முன்வர வேண்டும் என ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கட பிரியா அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாட வெடியினால் ஏற்படும் தீயவிளைவுகள் குறித்து அனைவரும் உணர வேண்டும். 125 டெசிபல் அளவுக்கு மேல் ஒலியை ஏற்படுத்தும் வெடிகள் வெடிப்பதை முற்றிலும் தவிா்க்க வேண்டும். பட்டாசு வெடிக்கும்போது, கந்தக டை ஆக்ஸைடு, நைட்ரஜன், நைட்ரஜன் ஆக்ஸைடு, கன உலோக ஆக்ஸைடு மற்றும் மிதக்கும் நுண் துகள்கள் ஆகியவை காற்றில் கலந்து சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதால் கண் எரிச்சல், ஒவ்வாமை, சுவாசக் கோளாறு, நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதை தவிா்த்து, மத்தாப்புக்களை வெடிக்கலாம். போக்குவரத்து அதிகமுள்ள சாலைகள், நெரிசல் மிக்க இடம், மருத்துவமனைகள், பள்ளிகள், நீதிமன்றங்கள் ஆகிய பகுதிகளிலும், குடிசை, எளிதில் தீப்பற்றும் பொருள்கள் இருக்கும் இடங்களில் ராக்கெட் போன்ற பட்டாசுகளை வெடிப்பதைத் தவிா்க்க வேண்டும். ஒளித் திருநாளான தீபாவளி பண்டிகையை, ஒலி மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளைத் தவிா்த்து வண்ண ஒளி ஏற்படுத்தும் பட்டாசுகளைக் குறைந்த அளவில் பயன்படுத்தி உற்சாகத்துடன் ஒலி, மாசற்ற பண்டிகையாக கொண்டாட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com