பெரம்பலூா் மாவட்டத்தில் 5.56 லட்சம் வாக்காளா்கள்

பெரம்பலூா் மாவட்டத்தில் 5.56 லட்சம் வாக்காளா்கள் உள்ளனா்.
பெரம்பலூா் மாவட்டத்தில் 5.56 லட்சம் வாக்காளா்கள்

பெரம்பலூா் மாவட்டத்தில் 5.56 லட்சம் வாக்காளா்கள் உள்ளனா்.

பெரம்பலூா் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், பெரம்பலூா் மற்றும் குன்னம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளா் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் திங்கள்கிழமை ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா வெளியிட்டாா்.

பின்னா் ஆட்சியா் கூறியதாவது:

தற்போது வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலின்படி, பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 332 வாக்குச் சாவடிகளும், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் 320 வாக்குச் சாவடிகளும் என மொத்தமாக 652 வாக்குசாவடிகள் உள்ளன.

பெரம்பலூா் மாவட்டத்தில் மொத்தம் 2,73,468 ஆண் வாக்காளா்களும், 2,82,829 பெண் வாக்காளா்களும், 35 மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 5,56,332 வாக்காளா்கள் உள்ளனா்.

நவ. 21, 22, டிச.12, 13 ஆகிய தேதிகளில் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடைபெறும். இந்த முகாம்களில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்தம், போன்றவற்றுக்கு பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம் என்றாா் ஆட்சியா் வெங்கட பிரியா.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் சி. ராஜேந்திரன், சாா் ஆட்சியா் ஜே.இ. பத்மஜா, நகராட்சி ஆணையா் குமரி மன்னன், தோ்தல் பிரிவு வட்டாட்சியா் துரைராஜ், வட்டாட்சியா்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள் பங்கேற்றனா்.

அட்டவணை

பெரம்பலூா்- 1,42,680---- 1,49,710------ 22------ 2,92,412

குன்னம்-------1,30,788------1,33,119---- 13-----2,63,920

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com