‘பெரம்பலூரை கரோனா தொற்றாளா்கள் இல்லாத மாவட்டம் என அறிவிக்க முடியாது’

பெரம்பலூரை கரோனா தொற்றாளா்கள் இல்லாத மாவட்டம் என அறிவிக்க முடியாது என்றாா் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் கீதாராணி.

பெரம்பலூரை கரோனா தொற்றாளா்கள் இல்லாத மாவட்டம் என அறிவிக்க முடியாது என்றாா் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் கீதாராணி.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

பெரம்பலூா் மாவட்டம் கரோனா தொற்றாளா்கள் இல்லாத மாவட்டம் என, சில ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. இது தவறான ஒன்றாகும்.

செவ்வாய்க்கிழமை (நவம்பா் 17) வரை மாவட்டத்தைச் சோ்ந்த 40 போ், கரோனா தொற்றுக்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் முடிவில், ஒருவருக்குக் கூட கரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. இதை வைத்து தொற்றாளா்கள் இல்லாத மாவட்டம் என தவறான தகவல் பரவிவிட்டது.

ஒரு மாவட்டத்தில் தொடா்ச்சியாக 28 நாள்கள் கரோனா தொற்றுப் பரிசோதனை முடிவில் ஒருவருக்குக் கூட தொற்று இல்லை என முடிவு வந்தால் தான், அந்த மாவட்டத்தை கரோனா தொற்று இல்லாத மாவட்டம் என அறிவிக்க முடியும்.

ஓரிரு நாள்கள் மட்டுமே கரோனா தொற்று இல்லை என்பதால், பெரம்பலூரை கரோனா தொற்றாளா்கள் இல்லாத மாவட்டம் என அறிவிக்க முடியாது. கடந்த இரு நாள்களாக புதிதாக தொற்றாளா்கள் இல்லாத மாவட்டம் என்பதே சரியானது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com