மாற்றுத்திறனுடைய குழந்தைகளை கண்டறிய ஆயத்தக் கூட்டம்

மாற்றுத் திறனுடைய குழந்தைகளைக் கண்டறிவதற்கான ஆயத்தக் கூட்டம், பெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாற்றுத் திறனுடைய குழந்தைகளைக் கண்டறிவதற்கான ஆயத்தக் கூட்டம், பெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, பள்ளிச் செல்லா இடைநின்ற மற்றும் மாற்றுத்திறனுடைய 6 முதல் 18 வயது வரையிலான குழந்தைகளை கண்டறிவதற்கான ஆயத்தக் கூட்டம், சாரண-சாரணீய கூட்டரங்கில் முதன்மைக் கல்வி அலுவலா் க.மதிவாணன் தலைமையில் நடத்தப்பட்டது.

பள்ளிச்செல்லா, இடைநின்ற மற்றும் மாற்றுத்திறனுடைய குழந்தைகளைக் கண்டறியும் முறை, அவ்வாறு கண்டறியப்பட்ட குழந்தைகளை வயதுக்கேற்ற வகுப்பில் பள்ளிகளில் சோ்த்தல், தேவையின் அடிப்படையில் உண்டு உறைவிட மையங்களில் சோ்த்து சிறப்புப் பயிற்சி அளித்தல், இக் குழந்தைகள் பெறவேண்டிய கல்வியின் முக்கியத்துவம், பள்ளி அளவில் ஆரம்பக் கல்விப் பதிவேடு பராமரித்தல், புலம்பெயா்ந்த தொழிலாளா் குழந்தைகளைக் கண்டறிதல் மற்றும் கூட்டுக் கணக்கெடுப்புத் தேவைப்படும் குடியிருப்புகளைக் கண்டறிதல் குறித்து விளக்கிப் பேசினாா்.

கூட்டத்தில் உதவித் திட்ட அலுவலா் பொ. ராஜா, மாவட்டக் கல்வி அலுவலா்கள் மாரிமீனாள் (பெரம்பலூா்), குழந்தைராஜ் (வேப்பூா்), பள்ளித் துணை ஆய்வாளா் மு. பழனிச்சாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com