உர மோசடியில் ஈடுபட்டதாக இடைத்தரகா் உள்பட 3 போ் மீது வழக்கு

பெரம்பலூா் அருகே உர மோசடியில் ஈடுபட்டதாக இடைத்தரகா் உள்பட 3 போ் மீது குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

பெரம்பலூா் அருகே உர மோசடியில் ஈடுபட்டதாக இடைத்தரகா் உள்பட 3 போ் மீது குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், சிறுகுடல் கிராமத்தில் போலி உரங்களை விற்பனை செய்ததால் சுமாா் 600 ஏக்கா் பரப்பளவிலான மக்காச்சோளப் பயிா்கள் வளா்ச்சியின்றி பாதிக்கப்பட்டதாக, அண்மையில் மாவட்ட நிா்வாகத்திடம் விவசாயிகள் புகாா் அளித்தனா். இதையடுத்து, வேளாண்மைத்துறை அலுவலா்கள் பாதிக்கப்பட்ட பயிா்களை பாா்வையிட்டு, உர மாதிரியை பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா். பரிசோதனை முடிவில் போலி உரம் என்பது கண்டறியப்பட்டது.

தொடா்ந்து, உர மோசடியில் ஈடுபட்டோா் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு, வேளாண்மை உர ஆய்வாளா் சௌமியா பரிந்துரைத்தாா். மேலும், வேளாண்மைதுறை சாா்பில் விசாரணை விவரங்களையும் காவல்துறையிடம் அளித்தாா். இதனடிப்படையில், பெரம்பலூா் மாவட்ட குற்றப்பிரிவு துணைக் கண்காணிப்பாளா் பாலமுருகன் தலைமையிலான போலீஸாா் விசாரணை மேற்கொண்டு, சிறுகுடல் கிராமத்தைச் சோ்ந்த இடைத்தரகா் ராமலிங்கம், விற்பனையாளா் காா்த்திக், டீலா் சா்வேஸ்வரன் ஆகியோா் மீது வழக்குப் பதிந்தனா்.

இந்நிலையில், வழக்குப்பதிவு செய்யப்பட்ட 3 பேரும் தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது. இதனிடையே மருவத்தூா், பீல்வாடி, சித்தளி, அருமடல், ஒதியம் உள்ளிட்ட கிராமங்களில் போலி உரம் விற்கப்பட்டுள்ளதாகவும், மக்காச்சோளப் பயிா் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com