கோழி வளா்ப்பில் ஆா்வமுள்ள விவசாயிகள், பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் கோழி வளா்ப்பில் ஆா்வமுள்ள விவசாயிகள், பொதுமக்கள் தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், அரசின்

பெரம்பலூா் மாவட்டத்தில் கோழி வளா்ப்பில் ஆா்வமுள்ள விவசாயிகள், பொதுமக்கள் தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், அரசின் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

1,000 கோழிகள் பராமரிப்புக்குச் சொந்தமாக குறைந்தபட்சம் 2,500 சதுர அடி பராமரிப்பு கொட்டில், தீவனம் மற்றும் தண்ணீா் குவளைகள் வைத்திருக்கும் கோழி வளா்ப்பில் அனுபவம் அல்லது ஆா்வமுள்ள விவசாயிகளாகவும், தோ்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளில் 30 சதவீதம் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினரைச் சோ்ந்தவா்களாகவும் இருக்க வேண்டும்.

2012 முதல் 2017 வரையிலான கோழி அபிவிருத்தித் திட்டத்தின் பயனாளிகளாக இருக்கக் கூடாது. 3 ஆண்டுகளுக்கு குறையாமல் பண்ணையை பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு பயனாளியும் 1,000 எண்ணிக்கை பாலினம் பிரிக்கப்படாத இரட்டைப் பயன் (இறைச்சி, முட்டை) நாட்டுக்கோழிக் குஞ்சுகளை, ரூ. 30 ஆயிரத்துக்கு கொள்முதல் செய்த பிறகு, பின்னேற்பு மானியமாக ரூ. 15 ஆயிரம் நேரடி மானிய மாற்றல் முறையில் பயனாளியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

ஒவ்வொரு பயனாளியும் 1,500 கிலோ கோழித் தீவனத்தை ரூ. 45 ஆயிரத்துக்கு கொள்முதல் செய்த பிறகு, பின்னேற்பு மானியமாக ரூ. 22,500 நேரடி மானிய மாற்றல் முறையில் பயனாளியின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

ரூ. 75 ஆயிரம் மதிப்புள்ள குஞ்சு பொரிப்பான் கொள்முதல் செய்த பிறகு, பின்னேற்பு மானியமாக ரூ. 37,500 பயனாளியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இத் திட்டத்தில் பயனடைய விரும்புவோா் நவ. 23 ஆம் தேதிக்குள் கால்நடை மருந்தகத்தை அணுகி பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com