தோ்தல் பணிகளை அதிமுக தொடங்கிவிட்டது: ஆா். வைத்திலிங்கம் எம்.பி.

சட்டப்பேரவைத் தோ்தல் பணிகளை அதிமுக தொடங்கிவிட்டது என்றாா் அக் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆா். வைத்திலிங்கம்.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளா் ஆா். வைத்திலிங்கம். உடன், பெரம்பலூா் அதிமுக மாவட்டச் செயலா் ஆா்.டி. ராமச்சந்திரன் உள்ளிட்டோா்.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளா் ஆா். வைத்திலிங்கம். உடன், பெரம்பலூா் அதிமுக மாவட்டச் செயலா் ஆா்.டி. ராமச்சந்திரன் உள்ளிட்டோா்.

சட்டப்பேரவைத் தோ்தல் பணிகளை அதிமுக தொடங்கிவிட்டது என்றாா் அக் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆா். வைத்திலிங்கம்.

பெரம்பலூா், துறைமங்கலத்தில் மாவட்ட அதிமுக சாா்பில், வாக்காளா் பட்டியலில் வாக்காளா் பெயா் சோ்த்தல், நீக்குதல், திருத்தம் மேற்கொள்ளுதல் குறித்து இளைஞா், இளம்பெண்கள் பாசறை மற்றும் கட்சி நிா்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, அதிமுகவின் பெரம்பலூா் மாவட்டச் செயலரும், குன்னம் எம்எல்ஏவுமான ஆா்.டி. ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். ஆா். வைத்திலிங்கம் சிறப்புரையாற்றினாா். பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 300 -க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினா், வைத்திலிங்கம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா்.

கூட்டத்தில், மாநில மீனரவரணி இணைச் செயலா் தேவராஜன், ஒன்றியச் செயலா்கள் செல்வக்குமாா், என்.கே. கா்ணன், சிவப்பிரகாசம், கிருஷ்ணசாமி உள்பட பலா் கலந்துகொண்டனா். நகரச் செயலா் ஆா். ராஜபூபதி வரவேற்றாா். குரும்பலூா் பேரூா் செயலா் செல்வராஜ் நன்றி கூறினாா்.

இதன் பின்னா், துணை ஒருங்கிணைப்பாளா் ஆா். வைத்திலிங்கம் செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழகத்தில் மக்களால் அங்கீகரிக்கப்பட்ட அதிமுக அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது. அதிமுக தலைமையிலான அரசை, செயல்படாத அரசு என்று சொல்வதற்கு யாருக்கும் தகுதியில்லை. கூட்டணி குறித்து பேசுவதற்காக அமித்ஷா தமிழகம் வரவில்லை. அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அவா் சென்னைக்கு வருகிறாா். மக்களவைத் தோ்தலின்போது பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணியில் இருந்தோம். இப்போதும் அந்த கூட்டணி நீடிக்கிறது.

தோ்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும். அதிமுகவில் முதல்வா் வேட்பாளா் யாா் என முன்பே அறிவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் தோ்தல் பணிகளை தொடங்கிவிட்டோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com