பறிமுதல் செய்யப்பட்ட 468 டன் பெல்லாரி வெங்காயம்: மலிவு விலை விற்பனைக்கு அனுப்பிவைப்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டு, அண்மையில் பறிமுதல் செய்யப்பட்ட 468 டன் பெல்லாரி வெங்காயம் தரம் பிரித்து சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

பெரம்பலூா் மாவட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டு, அண்மையில் பறிமுதல் செய்யப்பட்ட 468 டன் பெல்லாரி வெங்காயம் தரம் பிரித்து சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

பெரம்பலூா் மாவட்டம், இரூா், சத்திரமனை, மங்கூன் ஆகிய பகுதிகளில் உள்ள செயல்படாத கோழிப் பண்ணைகளில் சுமாா் 468 டன் பெல்லாரி வெங்காயம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது வேளாண் துறையினரால் கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது.

இதில் சம்பந்தப்பட்ட நபா்கள் மீது நடவடிக்கை மேற்கொண்ட மாவட்டநிா்வாகம், பறிமுதல் செய்யப்பட்ட வெங்காயத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அறிவுறுத்தியது.

அதன்படி, கூட்டுறவுத்துறை மூலமாக வெங்காயம் தரம் பிரிக்கப்பட்டு பசுமை பண்ணை கடைகளுக்கு அனுப்பும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

சென்னை, மதுரை, சேலம், தஞ்சை, திருவாரூா், நாகப்பட்டினம், தேனி, திண்டுக்கல் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பும் பணி மும்முரமடைந்துள்ளது. அதன்படி, இதுவரையில் சுமாா் 200 மெட்ரிக் டன் பெல்லாரி வெங்காயம் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வேளாண் துறையினா் தெரிவித்தனா்.

இன்னும் ஒரு சில நாள்களில் எஞ்சிய வெங்காயமும் தரம் பிரிக்கப்பட்டு அனுப்பி வைக்கும் பணி நிறைவடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது. மேலும், பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக் கடைகள் மூலம் கிலோ ரூ. 45-க்கு விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com