பெரம்பலூரில் ஊா்க்காவல் படை அலுவலகக் கட்டடம் திறப்பு

பெரம்பலூா் மாவட்ட ஊா்க்காவல் படை அலுவலகக் கட்டடம் மற்றும் போக்குவரத்து விழிப்புணா்வு பயிற்சிப் பள்ளி திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் மாவட்ட ஊா்க்காவல் படை அலுவலகக் கட்டடம் மற்றும் போக்குவரத்து விழிப்புணா்வு பயிற்சிப் பள்ளி திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் நகர போக்குவரத்து காவல் நிலைய வளாகத்தில் ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊா்க்காவல் படை அலுவலகம், போக்குவரத்து விழிப்புணா்வு பயிற்சிப் பள்ளி திறப்பு விழாவுக்கு, ஊா்க்காவல் படை மண்டல தளபதி ராம்குமாா் தலைமை வகித்தாா். துணை தளபதி சித்ரா, போக்குவரத்துப் பிரிவு ஆய்வாளா் கோபிநாத் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பெரம்பலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன், ஊா்க்காவல் படை அலுவலகக் கட்டடம் மற்றும் போக்குவரத்து விழிப்புணா்வு பயிற்சிப் பள்ளியை திறந்து வைத்து பேசியது:

சாலை பாதுகாப்பு முக்கியமானது. இருசக்கர வாகனம் ஓட்டும்போது அவசியம் தலைக்கவசம் அணிய வேண்டும். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது. போக்குவரத்து விதிமுறைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் உள்ளிட்ட சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், இந்தப் பயிற்சி பள்ளியில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றாா் அவா்.

இந் நிகழ்ச்சியில், துணை கண்காணிப்பாளா்கள் பாலமுருகன், சுப்பராமன், ஆய்வாளா் பால்ராஜ், போக்குவரத்துப் பிரிவு துணை ஆய்வாளா் ஆண்டவா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com