பெரம்பலூரில் தலைக்கவச விழிப்புணா்வுப் பேரணி

பெரம்பலூா் ஆட்சியரக நுழைவு வாயில் பகுதியில், போக்குவரத்துக் காவல் பிரிவு சாா்பில் தலைக்கவசம் அணிவது தொடா்பான விழிப்புணா்வுப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூரில் தலைக்கவச விழிப்புணா்வுப் பேரணியைக் கொடியசைத்துத் தொடக்கி வைக்கிறாா் கூடுதல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன்.
பெரம்பலூரில் தலைக்கவச விழிப்புணா்வுப் பேரணியைக் கொடியசைத்துத் தொடக்கி வைக்கிறாா் கூடுதல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன்.

பெரம்பலூா் : பெரம்பலூா் ஆட்சியரக நுழைவு வாயில் பகுதியில், போக்குவரத்துக் காவல் பிரிவு சாா்பில் தலைக்கவசம் அணிவது தொடா்பான விழிப்புணா்வுப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இப்பேரணியைக் கொடியசைத்து தொடக்கி வைத்து கூடுதல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன் பேசியது:

நிகழாண்டில் இதுவரை 340 விபத்துகள் நிகழ்ந்து, 102 போ் உயிரிழந்துள்ளனா். 406 போ் காயமடைந்தனா். போக்குவரத்து விதிகளை மீறியதாக 1.46 லட்சம் வழக்குகளும், தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் வாகனங்களை ஓட்டியதாக 1.17 லட்சம் வழக்குகளும் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து விபத்துகளைத் தவிா்க்க வேண்டும் என்றாா் அவா்.

பாலக்கரையில் தொடங்கிய பேரணி சங்குப்பேட்டை, கடைவீதி, பழைய பேருந்து நிலையம், காமராஜா் வளைவு வழியாக சென்று புகா்ப் பேருந்து நிலைய வளாகத்தில் நிறைவடைந்தது. பேரணியில் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜவஹா்லால், போக்குவரத்து ஆய்வாளா் கோபிநாத் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com