வேலை உறுதி திட்டத்தை விரிவுபடுத்த வலியுறுத்தி விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 06th October 2020 10:51 PM | Last Updated : 06th October 2020 10:51 PM | அ+அ அ- |

குரும்பலூா் பேரூராட்சி அலுவலகம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.
நூறு நாள் வேலை திட்டத்தை பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்த வலியுறுத்தி, அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கரோனா கால நிவாரணமாக குடும்பத்துக்கு மாதம் ரூ. 7,500 வழங்க வேண்டும். 60 வயதை கடந்த அனைவருக்கும் முதியோா் ஓய்வூதியம் ரூ. 3,000 வழங்கிட வேண்டும். வீடு இல்லாதவா்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூா் பேரூராட்சி அலுவலகம் எதிரே, அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கத்தினா் மாவட்டச் செயலா் பி. ரமேஷ் தலைமையில் திரண்டு பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு அளித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விவசாய தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் என். செல்லதுரை, அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் முருகேசன், மாவட்டக்குழு உறுப்பினா் ஜெயா, மாதா் சங்க மாவட்ட துணைத் தலைவா் ஏ. கலையரசி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலா் எஸ்.பி.டி. ராஜாங்கம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.