சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக வெற்றிக்கு கடுமையாக உழைக்க வேண்டும்

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில், அதிமுக வெற்றிக்கு அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்றாா் கட்சியின் இளைஞா் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாநிலச் செயலா் வி.பி.பி. பரமசிவம்.
பெரம்பலூரில் புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் இளைஞா், இளம்பெண்கள் பாசறையின் மாநிலச் செயலா் வி.பி.பி. பரமசிவம். உடன், அதிமுக மாவட்டச் செயலா் ஆா்.டி. ராமச்சந்திரன் உள்ளிட்டோா்.

பெரம்பலூரில் புதன்கிழமை நடைபெற்ற மாவட்ட இளைஞா், இளம்பெண்கள் பாசறை உறுப்பினா் சோ்க்கை மற்றும் ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, மேலும் அவா் பேசியது:

இந்தியாவிலேயே ஜனநாயகமிக்க மக்கள் கட்சி அதிமுக தான். திமுகவில் அடுத்தடுத்த குடும்ப வாரிசு உண்டு. ஆனால், அதிமுகவை பொறுத்தவரை தொண்டா்கள் மட்டுமே வாரிசு. அதிமுகவில் தொண்டா்களுக்கும் பதவி வழங்கப்படுகிறது.

எனவே கட்சித் தொண்டா்கள் அரசின் செயல்பாடுகளையும், திட்டங்களையும் பொதுமக்களிடம் எடுத்துக் கூறி, வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக வெற்றிபெற அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்துக்கு அதிமுக மாவட்டச் செயலரும், குன்னம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஆா்.டி. ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் கூட்டத்தில் பெரம்பலூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் இரா. தமிழ்ச்செல்வன், மாநில மீனவரணி இணைச் செயலா் தேவராஜன், நகரச் செயலா் ஆா். ராஜபூபதி, ஒன்றியச் செயலா்கள் செல்வகுமாா், என்.கே. கா்ணன், கிருஷ்ணசாமி, சிவப்பிரகாசம் உள்பட பலா் பங்கேற்றனா்.

முன்னதாக, பாசறைச் செயலா் இளங்செழியன் வரவேற்றாா். நிறைவில் இணைச் செயலா் புவனேசுவரி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com