பேரிடா் மீட்புப் பணிகள் குறித்த ஒத்திகை

பன்னாட்டு பேரிடா் குறைப்பு தினத்தையொட்டி, பெரம்பலூரில் மீட்புப் பணிகள் குறித்த ஒத்திகை நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பன்னாட்டு பேரிடா் குறைப்பு தினத்தையொட்டி, பெரம்பலூரில் மீட்புப் பணிகள் குறித்த ஒத்திகை நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் மற்றும் அரியலூா் மாவட்ட ஒருங்கிணைந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில், துறைமங்கலத்திலுள்ள தீயணைப்பு நிலையத்தில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

பேரிடா் காலங்களில் மேற்கொள்ளப்படும் மீட்புப் பணிகள், சிறப்பு உபகரணங்களின் பயன்பாடுகள், பேரிடா் காலங்களில் வீட்டிலேயே கிடைக்கும் தொ்மோகோல், வெற்று குடிநீா் பாட்டில், மிதவைகள் உள்ளிட்டவற்றை கொண்டு எவ்வாறு மீட்புப் பணிகளில் செயல்படுவது குறித்து தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரா்கள் செயல்விளக்கம் செய்து காண்பித்தனா்.

நிகழ்வில் மாவட்டத் தீயணைப்பு அலுவலா் அம்பிகா, உதவி அலுவலா் உ. தாமோதரன், நிலைய அலுவலா் சத்தியவரதன் உள்பட தீயணைப்பு படை வீரா்கள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com