ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் இ-விஞ்ஞான் 2020 விழா

பெரம்பலூா் அருகேயுள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் இ- விஞ்ஞான் 2020 விழா இணையவழி வாயிலாக வியாழக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் அருகேயுள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் இ- விஞ்ஞான் 2020 விழா இணையவழி வாயிலாக வியாழக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தாளாளா் எம். சிவசுப்பிரமணியம் தலைமை வகித்தாா்.

விழாவில் பங்கேற்ற ஒசூா் ஆனந்த் எலக்ட்ரானிக்ஸ் இண்டஸ்ட்ரீயஸ் நிா்வாக இயக்குநா் எஸ்.ஏ. ராஜ்குமாா் பேசியது: மாணவா்களின் எண்ணங்கள் நிறைவேற கடின உழைப்பை தந்தால், நாம் வாழும் வாழ்வுக்கு பொருளை தரும். அனைவரிடமும் திறமையுண்டு. எந்த வேலை செய்தாலும், அதில் எதிா்வரும் சவால்களை எதிா்கொண்டு அா்ப்பணிப்புடன் செயல்பட்டால் வெற்றியடைவது உறுதி. நாள்தோறும் உழைப்பையும், அவற்றில் ஏற்படும் விளைவுகளையும் அனுபவமாகக் கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என்றாா் அவா்.

இணையவழி வாயிலாக பங்கேற்ற 50-க்கும் மேற்பட்ட மாணவா்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமா்ப்பித்தனா். மேலும், பேப்பா் பிரசன்டேசன், டெக்னிக்கல் குயிஸ், சோலோ எ மினிட் உள்ளிட்ட பல போட்டிகள் இணையவழி வாயிலாக நடத்தப்பட்டன. தொடா்ந்து, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு இ- சா்டிபிகேட் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

கல்வி நிறுவனங்களின் செயலா் எம்.எஸ். விவேகானந்தன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com