நெல் பயிரில் ஒருங்கிணைந்த பயிா்மேலாண்மை பயிற்சி பெற அழைப்பு

பெரம்பலூா் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள ஹேன்ஸ் ரோவா் வேளாண் அறிவியல் மையத்தில் நடைபெறவுள்ள நெல் பயிரில் ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை பயிற்சி பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள ஹேன்ஸ் ரோவா் வேளாண் அறிவியல் மையத்தில் நடைபெறவுள்ள நெல் பயிரில் ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை பயிற்சி பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அந்த மையத்தின் முதுநிலை விஞ்ஞானியும், தலைவருமான வே.எ. நேதாஜி மாரியப்பன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வாலிகண்டபுரம் ஹேன்ஸ் ரோவா் வேளாண் அறிவியல் மையமும், ஹைதராபாத்தில் உள்ள இந்திய நெல் ஆராய்ச்சி நிலையமும் இணைந்து, ஒருங்கிணைந்த நெல் சாகுபடி திட்டத்தின் கீழ் 75 ஆதிதிராவிட நெல் சாகுபடி விவசாயிகளுக்கு 4 நாள் பயிற்சி வாலிகண்டபுரம் வேளாண் அறிவியல் மையத்தில் அளிக்கப்பட உள்ளது.

இப் பயிற்சியில், பாரம்பரிய நெல் வகைகளின் முக்கியத்துவம், கோடை உழவு செய்தல், மண் பரிசோதனை, பரிசோதனைப்படி உரமிடல், நாற்றங்கால், நீா், களை, பூச்சி, நோயின் அறிகுறிகள் மற்றும் அவற்றை மேலாண்மை செய்யும் முறைகள், அறுவடை முறைகள், பின்சாா் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் தொழில்நுட்ப உரைகளும், செயல் விளக்கங்கள் மற்றும் காணொலிக் காட்சி வாயிலாக பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியில் பங்கேற்பவா்ளுக்குத் தேவையான இடுபொருள்கள் வழங்கப்படும்.

எனவே, பயிற்சி பெற ஆா்வமுள்ள ஆதிதிராவிட விவசாயிகள் 8838255728, 7010882431 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் அலுவலக நாள்களில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை தொடா்புகொண்டு, தங்களது பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம். முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் பயிற்சியில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com