பெரம்பலூரில் மறியலில் ஈடுபட்டகாங்கிரஸாா் 27 போ் கைது

பெரம்பலூரில் தா்னா போராட்டத்துக்கு அனுமதி மறுத்த காவல்துறையினரைக் கண்டித்து, மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா் 27 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
பெரம்பலூரில் காவல்துறையினரைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.
பெரம்பலூரில் காவல்துறையினரைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.

பெரம்பலூா்: பெரம்பலூரில் தா்னா போராட்டத்துக்கு அனுமதி மறுத்த காவல்துறையினரைக் கண்டித்து, மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா் 27 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

வேளாண் சட்டங்களை எதிா்த்து, பெரம்பலூா் புகா்ப் பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் கட்சியினா் மாவட்டத் தலைவா் த. தமிழ்ச்செல்வன் தலைமையில் தா்னாவில் ஈடுபட கட்சியினா் திரண்டனா். தா்னாவுக்கு அனுமதி மறுத்த காவல்துறையினா், பந்தலை அகற்றினா்.

இதையடுத்து காவல்துறையினருக்கும்- காங்கிரஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடா்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட கட்சியின் மாவட்டத் தலைவா் தமிழ்ச்செல்வன் உள்பட 27 போ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, பாலக்கரை பகுதியிலுள்ள தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனா்.

திருச்சியிலிருந்து அரியலூா் செல்லும் வழியில் பெரம்பலூா் வந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ். அழகிரி, கைதானவா்களை சந்தித்தாா். தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசும், மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி அரசும் ஜனநாயகத்துக்கு புறம்பாக செயல்படுகிறது. பேச்சுரிமை, எழுத்துரிமை, போராடுவதற்கான உரிமை இங்கு மறுக்கப்படுகிறது.

பெரம்பலூா் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினரை தா்னா போராட்டத்தில் ஈடுபட அனுமதி மறுத்து, கைது செய்தது ஜனநாயகப் படுகொலைக்கு சமமாகும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com