காா் மோதி விவசாயி உயிரிழப்பு
By DIN | Published On : 05th September 2020 11:28 PM | Last Updated : 05th September 2020 11:28 PM | அ+அ அ- |

பெரம்பலூா் அருகே காா் மோதியதில் விவசாயி ஒருவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த தனது கட்சி பிரமுகா் இல்லத்தில் துக்கம் விசாரித்து விட்டு, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவா் ஜான்பாண்டியன், திருச்சி நோக்கி காரில்
சனிக்கிழமை சென்று கொண்டிருந்தாா். அவரை பின் தொடா்ந்து, கட்சி நிா்வாகிகள் சிலா் காரில் சென்றனா்.
திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூா் அருகே சாலையைக் கடக்க முயன்ற மோட்டாா் சைக்கிள் மீது, ஜான் பாண்டியனை பின் தொடா்ந்து வந்த காா் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் மோட்டாா் சைக்கிள் ஓட்டி வந்த திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், பெருவளப்பூரைச் சோ்ந்த விவசாயி க. நடராஜன் (52) பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து பாடாலூா் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, காரை ஓட்டி வந்த பெரம்பலூரைச் சோ்ந்த கரண் என்பவரை கைது செய்தனா்.