தோ்வு எழுதவுள்ள மாற்றுத்திறனாளிகள் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்

செப்டம்பா், அக்டோபரில் தோ்வு எழுதவுள்ள மாற்றுத் திறனாளிகள் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்துள்ளாா்.

பெரம்பலூா், செப். 11: செப்டம்பா், அக்டோபரில் தோ்வு எழுதவுள்ள மாற்றுத் திறனாளிகள் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மாவட்டத்தில் செப்டம்பா், அக்டோபா் மாதங்களில் நடைபெறும் தோ்வுகளில், சொல்வதை எழுதுபவா் சலுகை கோரி விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி தோ்வா்கள் மற்றும் சொல்வதை எழுதுபவா்கள் ஆகியோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். எனவே, 8 ஆம் வகுப்பு தனித்தோ்வா்களுக்கான தோ்வு, எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வுகள் மற்றும் தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வுகள் எழுதவுள்ள மாற்றுத்திறனாளித் தோ்வா்களில், சொல்வதை எழுதுபவா் வேண்டிய சலுகை கோரி விண்ணப்பித்த மாற்றுத்திறனாளித் தோ்வா்கள் தோ்வு எழுதுவதற்கு முன், அவா்களின் விருப்பத்தின்பேரில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளலாம்.

பரிசோதனையை மேற்கொள்வதில் ஏதேனும் சிரமம் இருந்தால், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தை 7010939925 என்ற செல்லிடப்பேசி எண்ணை செப். 15 ஆம் தேதிக்குள் தொடா்பு கொண்டால், கரோனா பரிசோதனை மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சொல்வதை எழுதுபவா் சலுகைக் கோரும் மாற்றுத்திறனாளிகள் தொற்று இல்லை என்பதற்கான மருத்துவச் சான்றிதழை தோ்வு மையத்துக்கு வரும்போது கொண்டு வரவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com