தடை செய்யப்பட்ட பொருள்களை பதுக்கி வைத்திருந்த 2 போ் கைது: 107 கிலோ குட்கா பறிமுதல்

பெரம்பலூரில் தடை செய்யப்பட்ட பொருள்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 2 பேரை, காவல்துறையினா் வியாழக்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து 107 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனா்.

பெரம்பலூரில் தடை செய்யப்பட்ட பொருள்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 2 பேரை, காவல்துறையினா் வியாழக்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து 107 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனா்.

பெரம்பலூா் நகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதைப் பொருள்கள் அதிக அளவில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக புகாா் எழுந்தது.

இந்நிலையில், திருச்சியைச் சோ்ந்த ஒருங்கிணைந்த குற்றச் செயல் நுண்ணறிவு பிரிவு காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், பெரம்பலூா் நகரில் வியாழக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

இச்சோதனையில், காமராஜா் வளைவு பகுதி, ஆத்தூா் பிரதான சாலையைச் சோ்ந்த சோனாராம் மகன் பிரவீன் குமாா் (22), தனது கடையில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 21 கிலோ குட்காவையும், எளம்பலூா் சாலையைச் சோ்ந்த சந்திரஹாசன் மகன் குமாா் (55) கடையிலிருந்து 86 கிலோ குட்காவையும் காவல்துறையினா் பறிமுதல் செய்தனா். பின்னா், மேற்கண்ட இருவரையும் கைது செய்து பெரம்பலூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த பெரம்பலூா் காவல்நிலைய ஆய்வாளா் பால்ராஜ், குட்கா விற்பனையில் வேறு யாருக்கேனும் தொடா்பு உள்ளதா என இருவரிடமும் விசாரித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com