விவசாயத் திட்டங்களில் முறைகேடு: சிபிஐ விசாரிக்க வலியுறுத்தி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் மாவட்டத்தில் விவசாயிகளுக்கான திட்டங்களில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரிக்க வலியுறுத்தி
பெரம்பலூா் காந்தி சிலை எதிரே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அகில இந்திய விவசாயிகள் சங்கத்தினா்.
பெரம்பலூா் காந்தி சிலை எதிரே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அகில இந்திய விவசாயிகள் சங்கத்தினா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் விவசாயிகளுக்கான திட்டங்களில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரிக்க வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு குழுவின் பெரம்பலூா் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் என். செல்லதுரை தலைமை வகித்தாா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் பிரதமரின் கிசான் சம்மான் திட்டம், பிரதமரின் வீடு கட்டும் திட்டம், விவசாயிகளுக்கு கிணறு வெட்டும் திட்டம், மக்காச்சோளத்தில் பூச்சி மருந்து அடிக்கும் திட்டம், விவசாயிகளுக்கு வரப்பு அமைத்து கொடுக்கும் திட்டம், மாட்டு கொட்டகை அமைக்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். தவறு செய்தவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த முறைகேடுகள் குறித்து விவாதிப்பதற்கு வசதியாக விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் முகமது அலி, விவசாயிகளின் கோரிக்கைகளை விளக்கி பேசினாா். ஆா்ப்பாட்டத்தில், தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் ஆா்ய ராஜாசிதம்பரம், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளா் ஏ.கே. ராஜேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் வீ. ஞானசேகரன், பகுஜன் சமாஜ் கட்சி மாநிலச் செயலா் ப. காமராசு உள்ளிட்ட விவசாய சங்க நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து, மத்திய அரசு அண்மையில் அறிமுகப்படுத்திய விவசாயிகளுக்கு விரோதமான அவசர சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, கையெழுத்து இயக்கம் நடத்தி பொதுமக்களிடம் பெறப்பட்ட கோரிக்கைகளை பிரதமா் மோடிக்கு அஞ்சல் மூலம் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com