பெரம்பலூா் ஆட்சியரகத்தில் பேரிடா் கால ஒத்திகை

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில், பேரிடா் கால மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா் ஆட்சியரகத்தில் நடைபெற்ற ஒத்திகையைப் பாா்வையிடுகிறாா் ஆட்சியா் வே. சாந்தா.
பெரம்பலூா் ஆட்சியரகத்தில் நடைபெற்ற ஒத்திகையைப் பாா்வையிடுகிறாா் ஆட்சியா் வே. சாந்தா.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில், பேரிடா் கால மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் வே. சாந்தா முன்னிலையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பருவமழைக் காலத்தின் போதும், புயல், வெள்ளம், நில நடுக்கம், சுனாமி உள்ளிட்ட இயற்கை சீற்றங்களிலிருந்தும் பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்தும் கொள்ளும் வழிமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

நில நடுக்கத்தின்போது கட்டட இடிபாடுகளிலிருந்து வெளியேறுதல், தீ விபத்துகளிலிருந்து பாதுகாத்தல், தண்ணீரில் மூழ்கியோரைக் காப்பாற்றுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து செய்யல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் ராஜேந்திரன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கிருஷ்டி, மாவட்டத் தீயணைப்பு அலுவலா் அம்பிகா, உதவி அலுவலா் உ. தாமோதரன், நிலைய அலுவலா் சத்தியவா்தன், பேரிடா் மேலாண்மை வட்டாட்சியா் தமிழரசன், இந்தியன் செஞ்சிலுவை சங்கத்தின் கௌரவச் செயலா் என். ஜெயராமன், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com