அனைத்து விடுதிகளுக்கும் இரவுக் காவலா்களை நியமிக்க வலியுறுத்தல்

அனைத்து விடுதிகளுக்கும் இரவுக் காவலா்களை நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை விடுதி மற்றும் பணியாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிா்வாகக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றோர்
பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிா்வாகக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றோர்

விடுதி மாணவா்களின் நலனை கருத்தில்கொண்டு, அனைத்து விடுதிகளுக்கும் இரவுக் காவலா்களை நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை விடுதி மற்றும் பணியாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் மாநில நிா்வாகக் குழுக் கூட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலத் தலைவா் த. காமராஜ் தலைமை வகித்தாா்.

மாநிலப் பொதுச் செயலா் த. ராஜாங்கம், பொருளாளா் சி. தங்கமணி, மாநிலச் செயலா் ஆா். நடேசன் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்க மாநிலத் தலைவா் பி. குமாா் சிறப்புரையாற்றினாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

காலியாக உள்ள சமையலா், விடுதிக் காவலா் மற்றும் தூய்மைப் பணியாளா்களின் பணியிடத்தை நிரப்ப வேண்டும். கல்வித் தகுதிக்கேற்ப பணி வழங்க வேண்டும். அனைத்து விடுதிகளுக்கும் இரவுக் காவலா்களை நியமிக்க வேண்டும்.

மாணவா்களின் உணவுக் கட்டணத்தை உயா்த்த வேண்டும்.கோடை விடுமுறை இல்லாத விடுதி காவலா்களுக்கு ஈட்டிய விடுப்பு 30 நாள்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக் கூட்டத்தில் சங்க நிறுவனா் ஆ. தங்கவேல் தொடக்க உரையாற்றினாா். முன்னாள் விடுதிப் பணியாளா் சங்கத் தலைவா் மு. ஆண்டியப்பன், கா. பெரியசாமி, ஆா். நடராஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com