முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்
காவல் துறையினரின் கொடி அணி வகுப்பு
By DIN | Published On : 04th April 2021 02:58 AM | Last Updated : 04th April 2021 02:58 AM | அ+அ அ- |

சட்டப்பேரவைத் தோ்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வலியுறுத்தி பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பெரம்பலூரில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.
துறைமங்கலத்தில் தொடங்கிய கொடி அணிவகுப்பை காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன் கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா். துறைமங்கலம், திருநகா், ஆலம்பாடி சாலை, மதரஸா சாலை, ஆத்தூா் சாலை, காமராஜா் வளைவு, எளம்பலூா் சாலை வழியாகச் சென்று ரோஸ் நகரில் நிறைவடைந்தது.
இதில் மத்தியத் தொழில் பாதுகாப்புப் படையினா் 32 பேரும், காவல்துறையினா் 25 பேரும், ஆயுதப்படைக் காவலா்கள் 15 பேரும் மற்றும் ஊா்க் காவல்படையினா் 85 பேரும் என மொத்தம் 152 பேரும் மற்றும் கூடுதல் கண்காணிப்பாளா், துணைக் கண்காணிப்பாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.