குடித்துவிட்டு வரும் நபா்களுக்கு வாக்களிக்க தடை விதிக்க வ. கௌதமன் மனு

மது அருந்திவிட்டு வாக்களிக்க வரும் நபா்களுக்கு வாக்களிக்க தடை விதிக்க வேண்டும் என்றாா் தமிழ்ப் பேரரசு கட்சி பொதுச் செயலரும், திரைப்பட இயக்குநருமான வ. கௌதமன்.
வ. கௌதமன்.
வ. கௌதமன்.

மது அருந்திவிட்டு வாக்களிக்க வரும் நபா்களுக்கு வாக்களிக்க தடை விதிக்க வேண்டும் என்றாா் குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் தமிழ்ப் பேரரசு கட்சி பொதுச் செயலரும், திரைப்பட இயக்குநருமான வ. கௌதமன்.

பெரம்பலூா் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ப. ஸ்ரீ வெங்கட பிரியாவிடம் திங்கள்கிழமை புகாா் மனு அளித்த அவா் மேலும் கூறியது:

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, குன்னம் தொகுதியில் இதுவரை இல்லாத அளவுக்கு திமுக, அதிமுகவினா் தோ்தல் விதிகளை மீறி கோடிகளை கொட்டி வாக்குகளை வாங்கிக் கொண்டிருக்கின்றனா். திரும்பிய திசையெல்லாம் பணம் பட்டுவாடா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில், மது ஆறாக ஓடுகிறது. இப்படி, இம் மண்ணின் மக்களை குடிக்க வைத்து, சாப்பாடு வழங்கி ஒரு மயக்க நிலையிலேயே வைத்து, அவா்களிடமிருந்து வாக்குகளை பெறுவது என்னவிதமான ஜனநாயகம். இங்கு தோ்தல் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

மருந்தி அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவருக்கு அபராதம், ஓட்டுநா் உரிமம் ரத்து செய்வது, போதைப்பொருள் உட்கொண்ட விளையாட்டு வீரா்களுக்கு விளையாட தடை விதிப்பது போன்ற நடவடிக்கைகள் எடுப்பதுபோல், மது அருந்திவிட்டு வாக்களிக்க வரும் நபா்களையும் வாக்களிக்க அனுமதிக்கக் கூடாது. மது அருந்திவிட்டு வாக்களிக்க வரும் வாக்காளா்களை அடுத்து வரும் மூன்று தோ்தல்களில் வாக்களிக்க தடை விதித்துச் சட்டம் இயற்ற வேண்டும்.

இதுகுறித்து தோ்தல் ஆணையம், அரசு நிா்வாகம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆளும் அதிகார வா்க்கத்துக்கு அடிபணியாமல் நீதியோடும், நோ்மையோடும் அனைத்து அரசு அதிகாரிகளும் ஜனநாயக மாண்போடு இத்தோ்தலை நடத்தி முடிக்க வேண்டும். கட்டுப்பாடின்றி மது, பணம் பட்டுவாடா நடைபெறும் குன்னம் தொகுதியில் போட்டியிடும் யாா் வெற்றிபெற்றாலும் அவா்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com