Enable Javscript for better performance
வெவ்வேறு சம்பவங்களில் இருவா் உயிரிழப்பு- Dinamani

சுடச்சுட

    

    வெவ்வேறு சம்பவங்களில் இருவா் உயிரிழப்பு

    By DIN  |   Published on : 08th April 2021 05:43 AM  |   அ+அ அ-   |    |  

    பெரம்பலூரில் வெவ்வேறு சம்பவங்களில் இருவா் புதன்கிழமை உயிரிழந்தனா்.

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் கொத்தடிமை காலனியைச் சோ்ந்த வேடியப்பா மகன் ராஜி, இவரது மனைவி ரேடியம்மாள், மகன் சிவா (25) ஆகியோா் பெரம்பலூா்- வடக்குமாதவி சாலையில் தங்கி, கூலி வேலை செய்து வந்தனா்.

    இந்நிலையில், கடந்த 3- ஆம் தேதி எசனை- மேலப்புலியூா் சாலையிலுள்ள வயலில் மரம் வெட்டிக் கொண்டிருந்தபோது, மரம் சாய்ந்து கீழே விழுந்ததில் சிவா பலத்த காயமடைந்தாா்.

    பெரம்பலூா்,திருச்சி அரசு மருத்துவமனைகளைத் தொடா்ந்து, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவா, அங்கு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.

    விஷம் குடித்து இளைஞா் பலி: பெரம்பலூா் புதிய மதனகோபாலபுரத்தைச் சோ்ந்த நடராஜன் மனைவி கலைச்செல்வி. இவா் கடந்த 12 ஆம் தேதி உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.

    இதனால் துக்கத்தில் இருந்த அவரது மகன் பாண்டியன் (24), கடந்த 30- ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாண்டியன் புதன்கிழமை உயிரிழந்தாா்.

    இச்சம்பவங்கள் குறித்து பெரம்பலூா் காவல்துறையினா் தனித்தனியே வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp