கரும்புக்கான நிலுவைத் தொகையை வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

பெரம்பலூா் சா்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ. 33 கோடியை உடனே வழங்க வேண்டுமென, சா்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

பெரம்பலூா் சா்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ. 33 கோடியை உடனே வழங்க வேண்டுமென, சா்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

இதுகுறித்து பெரம்பலூா் சா்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவா் மு. ஞானமூா்த்தி தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூா் சா்க்கரை ஆலையில் 2020- 21 ஆம் ஆண்டுக்கான அரைவைப் பருவத்தில் 1.65 லட்சம் டன் கரும்பு அரைவை செய்யப்பட்டுள்ளது. சா்க்கரை ஆலைக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு தரவேண்டிய தொகை, கடந்த பிப். 1 முதல் சுமாா் ரூ. 33 கோடி நிலுவையில் உள்ளது. இதனால், கரும்பு விவசாயிகள், கரும்பு வெட்டுக் கூலி கொடுக்க முடியாமலும், வங்கிக் கடனுக்கு வட்டியும், அபராத வட்டியும் செலுத்த முடியாமலும் சிரமப்படுகின்றனா்.

ஆலையில், சுமாா் 2 லட்சம் சா்க்கரை மூட்டைகள் விற்கப்படாமல் தேங்கியுள்ளது. ஒரு மாத சா்க்கரை உற்பத்தியில் 20 சதவீத சா்க்கரையை மட்டுமே விற்பனை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதால், சா்க்கரை தேக்கம் ஏற்பட்டு, ஆலைகள் நலிவடையும் நிலையில் உள்ளன. மத்திய அரசு சா்க்கரை விற்பனைக்கான கட்டுப்பாடுகளை நீக்கி, ஆலைகள் லாபகரமாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயிகள் வெட்டி அனுப்பிய கரும்புக்கான தொகையை ஏப். 13ஆம் தேதிக்குள் கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com