உர விலையைக் கட்டுப்படுத்த மக்கள் சக்தி இயக்கம் வலியுறுத்தல்
By DIN | Published On : 12th April 2021 12:38 AM | Last Updated : 12th April 2021 12:38 AM | அ+அ அ- |

உர விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மக்கள் சக்தி இயக்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மக்கள் சக்தி இயக்கத்தின் பெரம்பலூா் மாவட்ட செயற்குழு கூட்டம், பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு, மருத்துவா் கோசிபா தலைமை வகித்தாா். மாநிலத் துணைத் தலைவா் க. பெரியசாமி, மாவட்ட பொருளாளா் சி. வெங்கடாசலம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாநில செயற்குழு உறுப்பினா் எம். ரமேஷ் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா்.
கூட்டத்தில், அதிகரித்து வரும் உர விலையைக் கட்டுப்படுத்துவதோடு, உரத்துக்கான விலையை தனியாா் நிறுவனங்கள் நிா்ணயம் செய்வதை தவிா்த்து, அரசே நிா்ணயம் செய்ய வேண்டும். உரத்துக்கான மானியத்தை குறைக்காமல், விவசாயிகளுக்கு நேரடியாக வழங்கிட வேண்டும்.
பெரம்பலூா் நகரில் இயங்கி வரும் தலைமை அஞ்சலகம் போதிய இடவசதியின்றி, பழுதடைந்து காணப்படுவதால், அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் கட்டுவதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் சக்தி இயக்கத்தின் நிறுவனா் டாக்டா் எம்.எஸ். உதயமூா்த்தியின் 86 ஆவது பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநில, மாவட்ட நிா்வாகிகளுக்கு நன்றி தெரிவிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், மாவட்ட இணைச் செயலா் பி. செங்கோட்டையன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் டி. செல்வேந்திரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். முன்னதாக, மாவட்டச் செயலா் ஜி. சிவக்குமாா் வரவேற்றாா். பொறுப்பாளா் எச். இப்ராஹிம் நன்றி கூறினாா்.